Designed by Iniyas LTD
வனப்பகுதியில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட மனு நாளை விசாரணைக்கு வருகின்றது
திருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரும் மனு நாளை ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அப்போது ஆந்திர மாநில டிஜிபி தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஷேசாசலம் வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் மக்கள் உரிமை கழகம் வழக்கு தொடர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி கல்யாண்சிங் குப்தா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது. அப்போது அம்மாநிலத்தின் டிஜிபி ராமுடு, துப்பாக்கிச்சூடு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்தார்.
இது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், 20 பேரை சுட்டுக்கொன்ற போலீசார் மீது ஏன் கொலை வழக்கு பதிவு செய்யவில்லை என வினா எழுப்பி, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இதனை தொடர்ந்து நாளை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.