Designed by Iniyas LTD
Comments
Trending
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லதரன்கட்டு பான்குளம் கிராமத்தில் வசிக்கும் ஆர். பி. ரன்மெனிக்கே எனும் சிங்கள வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
உயிரிழந்த வயோதிபப் பெண் தினமும் மாலையில் தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் தேவாலயத்திற்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
இவ்வாறு சம்பவ தினமான கடந்த வியாழக்கிழமை இவர் தேவாலயத்திற்குச் சென்று அங்கு சற்று தாமதித்திருந்த போது 63 வயதுடைய அயலவரான மற்றொரு வயோதிபப் பெண்ணும் அங்கு வந்து தகராற்றில் ஈடுபட்டு அப்பெண்ணைத் தாக்கியுள்ளார்.
இது தொடர்பில் சிலாபம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. மறுநாள் பொலிஸார் எதிராளியான பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து அப்பெண்ணை எச்சரித்துள்ளனர். இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான பெண் மீண்டும் கடுமையான சுகயீனத்திற்கு உள்ளாகி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Prev Post
Recover your password.
A password will be e-mailed to you.