தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வரலட்சுமிக்கு கிடைத்த அதிஷ்டம் – ஒரே நேரத்தில் 4 படங்கள்

தனக்கென்று ஒரு பெயரை தமிழ் சினிமாவில் எடுத்த வரலட்சுமி சரத்குமார் இந்த வாரம் அதிகளவில் பேசப்பட்ட நடிகைகள் லிஸ்டில் இணைந்திருந்தார். அதற்கு சமூக வலைத்தளத்தை ஸ்டில் ஒன்று வெளியானமையே காரணம்.

அந்த புகைப்படமானது படத்தின் ப்ரோமோஷனுக்காக வெளியிடப்பட்டது என அவரே ட்விட் செய்துள்ளார்.

இந்த நிலையில், பல்வேறு படங்களில் இவர் நடித்திருந்தாலும் வெளியான அனைத்து படங்களும் படு தோல்வி அடைந்தது மேலும் நடித்த சில படங்களும் கிடப்பில் இருக்க ராசியில்லாத நடிகை என்றும் வரலட்சுமியை சுட்டிக்காட்டி வருகின்றார்கள்.

இருந்தாலும் ஒரு ஆச்சரியம் என்னவெனில், ஒரே நேரத்தில் 4 படங்கள் வரலட்சுமி சரத்குமாருக்கு கமிட்டாகிவிட்டதாம்.

நிபுணன், அம்மாயி, சத்யா, விக்ரம் வேதா படத்தில் நடிக்கவுள்ள நிலையில் “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்” என்ற படமும், சித்தார்த் நடிக்கும் படமும் புதிதாக இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Loading...