Designed by Iniyas LTD
வரும் வியாழனன்று குடாநாட்டில் மேலும் சில பகுதிகள் இராணுவத்தால் விடுவிப்பு..
யாழ்ப்பாணம் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் , ஆனைக்கோட்டை கூழாமுறிப்பு இராணுவ முகாம் , உள்ளிட்ட சில பிரதேசங்கள் வரும் வியாழனன்று உத்தியோக பூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை யாழ் மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் குடாநாட்டில் பொதுமக்களின் பாவனைக்குரிய சில இடங்களை விடுவிக்குமாறு கோரியிருந்த நிலையில் 4 இடங்களை விடுவிக்க படையினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் வசாவிளான் மற்றும் குரும்பசிட்டிப் பகுதியில் உள்ள ஓர் கூட்டுறவுச் சங்க கிளைக் கட்டிடத்துடன் ஓர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடமும் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான அறிவித்தல் யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத் தளபதியினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த கட்டிடங்கள் தம்மிடம். கையளிக்கப்பட்டதும் உடனடியாகவே உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் யாழ் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.