Designed by Iniyas LTD
வருவாயா பாலா அண்ணாவே ! ……….

வருவாயா பாலா அண்ணாவே !
தமிழர் ஈழத்தின் கோலத்தை
உலக நீளத்தில் கொண்டு – தமிழர்
காலத்தின் தேவையை அரசியல் வென்று
அண்ணன் பாரத்தை குறைத்த – எம்
பாலா அண்ணாவே !
உன் வீரத்தை தோள்களில்
சுமந்திட முடியா தூரத்தில்
நீ போன நினைவதை தேடி
துயரத்தில் வாடுகிறோமே !
அயராது உழைத்த உன் நிலைக்கு
நிகரேது.
தமிழர் நிலம் விழுங்கும் பேய் விரட்ட
வீரம் சொல்லி களமிறங்கும்
புலித் தளம் நின்று – உலக
வலம் வந்த தோழா
உயிரினும் மேலான உன்
உணர்வதை சுமந்து
பயிராகி வளர்க்கிறோம்
பாலா அண்ணாவே – மீண்டும்
வருவாயா உன்னைப் போல்
வீரம் சொல்லித் தருவாயா !
ஆக்கம் :- ச. மீனா.