Designed by Iniyas LTD
வலயக்கல்வி அலுவலகத்தில் செயலாளரை மீறி சில துஸ்பிரயோக செயற்பாடுகள்
வலயக்கல்வி அலுவலகத்தில் செயலாளரை மீறி சில உத்தியோகத்தர்கள் அதிகாரங்களை தொடர்ந்தும் துஸ்பிரயோகம் செய்வதாக வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இவ்வாறான செயற்பாடுகளின் காரணத்தினால் தான் அண்மையில் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட காரணமாக இருந்தது அவ்வாறான அதிகார துஸ்பிரயோகம் தொடர்வதாக அறிகின்றேன். மேலதிகாரி ஒரு பணிப்புரையை வழங்கினால் அதன் பிரகாரம் செய்து முடிக்க வேண்டியது உத்தியோகத்தர்களின் கடமை.
இனிவரும் காலங்களில் சம்மந்தப்படும் உத்தியோகத்தர்கள் கடமைகளை செவ்வெனச் செய்தால் மீண்டும் ஒரு பிரச்சினை வராமல் இருக்கும். பிழையான விடயங்களை நாம் சுட்டிக்காட்டினால் தான் மீண்டும் அதே பிழை நடக்காமல் இருக்கும் என வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் தெரிவித்துள்ளார்.