Designed by Iniyas LTD
வலி மேற்கில் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விழிப்புக் குழுக்கள்..
வலி.மேற்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் போதைப் பொருள் பாவனை மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு விழிப்பு குழுக்களை அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலி.மேற்குப் பிரதேச சபையின் அமர்வு தவிசாளர் த,நடனேந்திரன் தலைமையில் சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த அமர்வின் போது 5 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அவை போதைப் பொருள் பாவனை,தனியார் கல்வி நிலையங்கள், சிறுவர் துர்நடத்தைகள், மயானங்கள் சீரமைப்பு,மயானங்கள் சீரமைப்பு ஆகிய தீமானங்கள் தொடர்பில் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு , அவற்றினை தடுப்பதற்கான வழிமுறைகளும் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிகப்படுகின்றது.
