Designed by Iniyas LTD
வலி வடக்கில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதியில் 1200 குடும்பங்கள் மீள்குடியேற உள்ளனர்
வலி வடக்கில் இராணுவத்தினரால் கடந்த வாரம் விடுவிக்கப்பட்ட 683 ஏக்கர் நிலப்பரப்பில் ஆயிரத்து இருநூறு குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட உள்ளதாக தெரியவருகின்றது.
வலிவடக்கில் தென்மயிலை, மயிலிட்டி வடக்கு மற்றும் தையிட்டி கிழக்கு ஆகிய பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியமர யாழ்.மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் 350 குடும்பங்கள் உட்பட சுமார் ஆயிரத்து 200 குடும்பங்கள் தயாராகி வருகின்றனர்.
இதேவேளை மீள்குடியமரவுள்ள மக்கள் தங்கள் நிலங்களை பார்வையிட்டு அந்தப் பகுதிகளில் மீள்குடியமர்வை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.