தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வலையக்கல்விப்பணிப்பாளரை இடமாற்றக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

protest-_18துணுக்காய் கல்வி வலயப் பணிப்பாளர் மாலினி வெலிங்ரனை இடமாற்றக் கோரியும் அவரின் அதிகார துஸ்பிரயோகம், நிதி ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணை அறிக்கையை துரிதப்படுத்தக் கோரியும் செம்மணி வீதியிலுள்ள வடமாகாண கல்வி அமைச்சை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 62 பாடசாலைகளைச் சேர்ந்த 255 ஆசிரியர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
2013 ஆம் ஆண்டு துணுக்காய் கல்வி வலயப் பணிப்பாளருக்கு எதிராக அதிகார துஸ்பிரயோகம், மற்றும் நிதி ஊழல் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்களை ஆசிரியர்கள் முன்வைத்தனர். ஆனால் இதுவரை அவருக்கு எதிராக எந்தவொரு விசாரணை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . எனவே குறித்த பணிப்பாளரை உடனடியாக இடமாற்றக் கோரி இன்றைய தினம் ஆசிரியர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மேலும் குறித்த பணிப்பாளரை இடமாற்றக் கோரி மகஜர் ஒன்றை கல்வி அமைச்சர், வடமாகாண முதலமைச்சர், வடமாகாண ஆளுநருக்கு கையளிக்கவிருப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்
Comments
Loading...