Designed by Iniyas LTD
வல்வெட்டித்துறையில் சுமார் 110 கிலோ கஞ்சா பொலிஸாரால் மீட்பு..
வல்வெட்டித்துறையில் சுமார் 110 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகளை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் கஞ்சா போதைப்பொருளை வேறு இடத்துக்குக் கடத்த முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன்பின்னரே விசாரணைகளின் பின்னரே மேலதிக விவரம் தெரியவரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
