Designed by Iniyas LTD
வளைந்த திரையுடன் செம்சுங் கெலக்ஸி விற்பனைக்கு
இதுவரை காலமும் அசாத்தியமானதாகவும், ஓப்பீட்டளவில் சாத்தியமற்றதாகவும் கருதப்பட்ட வளைந்த திரையைக் கொண்ட ஸ்மார்ட் போனை உருவாக்கி செம்சுங் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
எல்.ஜி. நிறுவனம் வளையக்கூடிய ஸ்மார்ட் போனை வெளியிடப்போவதாக அண்மையில் தெரிவித்திருந்தது.
இத்திரையே இதனை சந்தையில் உள்ள மற்றைய ஸ்மார்ட் போன்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது.
இதன் சில தொழிநுட்ப அம்சங்கள் வருமாறு
Video 2160p@30fps, 1080p@60fps
Secondary 2 MP, 1080p@30fps
OS Android OS, v4.3 (Jelly Bean)
Chipset Qualcomm Snapdragon 800
CPU Quad-core 2.3 GHz Krait 400
GPU Adreno 330
தற்போது தென்கொரியாவில் மட்டுமே இது வெளியாகியுள்ளது. மேலும் இதன் விலை சுமார் 1000 அமெரிக்க டொலர்களாகும்.இது சந்தையில் எவ்வாறான வரவேற்பைப் பெறப்போகின்றது என்பதை வைத்தே இதே போன்று வளைந்த திரையைக் கொண்ட அல்லது இதனை விட மேம்பட்ட முற்றாக மடியக் கூடிய ஸ்மார்ட் போன்களை மற்றைய நிறுவனங்களும் வெளியிடும்.
எனினும் மக்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா? என சற்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
