தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வழக்குகளின் அழைப்பாணையை கோத்தபாய ராஜபக்சவிடம் வழங்கிய சட்டத்தரணி


தனிப்பட்ட வியஜமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ள கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளின் அழைப்பாணை அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட பத்திரிகையாளர் லசந்தவின் மகள், மற்றும் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் சார்பில் கனடிய தமிழர் ரோய் சமாதானம் ஆகியோர் குறித்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த இரண்டு வழக்குகளின் அழைப்பாணையை கோத்தபாய ராஜபக்சவிடம், சட்டத்தரணியொருவர் அமெரிக்காவில் வைத்து வழங்கியுள்ளார்.

கலிபோர்னியாவிலுள்ள விற்பனை நிலையமொன்றின் கார் நிறுத்துமிடத்தில் வைத்து கோத்தபாயவிடம் குறித்த அழைப்பாணைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...