Designed by Iniyas LTD
வழமைக்குத் திரும்புகிறது உடுவில் மகளிர் கல்லூரி!
உடுவில் மகளிர் கல்லூரியில் நிலவிய சர்ச்சை முடிவுற்று நேற்றைய தினம் புதிய அதிபரிடம் பொறுப்புக்கள் அனைத்தையும் உத்தியோக பூர்வமாக கையளித்தார் . இன்று முதல் பாடசாலை வழமைபோல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இடம்பெற்ற விரும்பத் தகாத சம்பவங்களின் நிமித்தம் கல்லூரியின் கற்றல் செயல்பாடு முழுமையாக முடங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் நேற்றைய தினம் கல்லூரியின் பழைய அதிபர் தனது கடமைகளையும் பொறுப்புக்களை உத்தியோக பூர்வமாக கல்லூரியில் வைத்துக் கையளித்தார். இதன் பிரகாரம் இன்று முதல் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் வழமைக்குத் திரும்பும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளனர்.