தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் இராணுவ வாகனம் மோதி விபத்து! 4 பேர் படுகாயம்

வவுனியா – ஓமந்தை பகுதியில் இராணுவ வாகனத்துடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா, இராசேந்திரன்குளம் ஆடைத்தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை ஏற்றி வந்த வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வான் வவுனியா ஓமந்தைப் பகுதியில் திரும்ப முற்பட்ட வேளையில் பின்னால் வந்த இராணுவ வாகனத்துடன் மோதுண்டுள்ளது.

இதன்போது, வானில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...