Designed by Iniyas LTD
வவுனியாவில் இரு இடங்களில் வாள்வெட்டு தாக்குதல்
வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று இரவு வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வீட்டில் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டு பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிற்கு சென்ற 15க்கு மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் அங்கு நின்ற இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அதோடு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் தீயிட்டு கொழுத்தி வீட்டின் யன்னல் கண்ணாடி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கதவை உடைத்து சுமார் 7லட்சம் பெறுமதியான பணத்தினை கொள்ளையடித்துச் தப்பித்துச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் போது வீட்டினுள் ஜன்னல் அருகில் உறங்கிக்கொண்டிருந்த 2 மாத கைக்குழந்தை நூலிழையில் உயிர் தப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த தாக்கதுல் சம்பவத்தில் காயமடைந்த குறித்த இளைஞன் சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றையதினம் வவுனியா தவசிகுளம் மற்றும் கூமாங்குளம் பகுதியில் இளைஞர் குழுக்கள் இரண்டுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் சுந்திரமூர்த்தி என்ற 36 வயதுடைய நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.