தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் இளைஞரிடமிருந்து கஞ்சா மீட்பு…

வவுனியா தரணிக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவரிடமிருந்து நேற்று இரவு கஞ்சா மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விஷேட அதிரடிப்படையினருக்குக்கிடைத்த இரகசிய தகவல் அடுத்து குறித்த கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த 25வயதுடைய குறித்த இளைஞனை கைது செய்த படையினர் வவுனியா பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞன் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...