தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் ஊடகவியலாளர் கைது…

வவுனியாவில்  இயங்கும் பிராந்திய பத்திரிகை ஒன்றில் பிரதான செய்தியாளராக பணிபுரியும் ஒருவர் நேற்று மாலை வவுனியா பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை குறித்த  ஊடகவியலாளரை  பொலிஸ்நிலையத்துக்கு வருமாறு  பொலிஸார் அழைத்துள்ளனர்.

அதனை அடுத்து   அங்கு சென்ற அவரிடம் வாக்குமூலத்தை பதிவுசெய்துவிட்டு தடுத்து வைத்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்ற வவுனியா ஊடக சங்கங்களின் பிரதிநிதிகள் , சக ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் அழைப்பின்பேரில் சென்றிருந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் ஆகியோர் பொலிஸ்நிலையம் சென்றுள்ளனர்.

எனினும் குறித்த  ஊடகவியலாளரை பார்வையிட பொலிஸார்  அனுமதிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை அண்மையில் வவுனியாவில் ஆவா குழு என்ற பெயரில் வீசப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்களை செய்திக்காக எடுத்துச்செல்லும் போது ,

தனது நண்பர்களுக்கு காண்பித்தார் என்ற குற்றச்சாட்டில்  குறித்த ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...