தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு….

வவுனியா  மறவன்குளம் பகுதியில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மறவன்குளம் 6ஆம் ஒழுங்கையில் வசித்து வந்த விவசாயியான  இராமசாமி ஜெயக்குமார் என்கின்ற   6 பிள்ளைகளின் தந்தையே  இவ்வாறு சடலமாக மீட்கப்ப்ட்டுள்ளார்.

அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே    கடும் வாக்குவாதம் நேற்றிரவு  இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து  இன்று காலை மனைவி கணவனைத் தேடிச் சென்றபோது மனைவியின் புடவையில் தூக்கில் தொங்கிய நிலையில்  சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில்  ஈச்சங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து  சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் சடலைதை மீட்டுள்ளனர்.

மெலும் குறித்த நபர் நேற்று இரவு தூக்கில் தொங்கியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில்,   மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸாருடன் இணைந்து தடவியல் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றதாக தெரியவந்துள்ளது.​​

Comments
Loading...