தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில்……

ஆவா குழுவின் துண்டு பிரசுரங்களை அயலவர்களுக்கு விநியோகித்தார் என்ற சந்தேகத்தில் ஊடகவியலாளர் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று முன் தினம்  கைது செய்திருந்தனர்.

வவுனியா மாவட்டத்தினை தளமாக கொண்டு இயங்கும் தினப்புயல் பத்திரிகை அலுவலக செய்தியாளர் இ.தர்சன் என்பவரே இவ்வாறு   கைது செய்யப்பட்டிருந்தார்.

கைதுசெய்யப்பட்ட அவரை தடுப்புக்காவலில் வைத்த பொலிஸார்  நேற்றைய தினம் அவரை   வவுனியா மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.

இதன்போது  வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த ஊடகவியலாளரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை  ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டதை அறிந்த  வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் மற்றும் இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள்,

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் தடுப்பு காவலில் உள்ள ஊடகவியலாளரை சந்திப்பதற்கு சந்திப்பதற்கு அனுமதி கோரிய போதும்,

பொலிஸாரினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தமையும், அதிகாலை 1 மணிவரை ஊடகவியாலர்கள் பொலிஸ் நிலையத்தில் காவல் நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் , குறித்த ஊடகவியலாளரும் வீட்டுக்கு அண்மையில் வீதிகளில் விசிறப்பட்டிருந்த ஆவா குழுவின் துண்டு பிரசுரங்களை செய்திக்காக எடுத்துச் சென்ற போது,  அவர் தனது வீட்டு அயலவர்கள் சிலருக்கு காட்டியதாக  தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...