தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் சட்டவிரோதமாக முதிரை மரகுற்றிகளை கடத்த முற்பட்டவர்கள் கைது..

வவுனியா மாமடுவ பகுதியில் நேற்று (26) இரவு  சட்டவிரோதமாக முதிரை மரகுற்றிகளை கடத்த முற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.

வவுனியா மாமடு பகுதியில் நேற்று (26) இரவு 10 மணியளவில் பட்டா ரக வாகனத்தில் முதிரை மரகுற்றிகளை கடத்துவதாக மாமடுவ பொலிசாருக்கு   ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில்   சேமமடு பகுதியில் வைத்து முதிரை மரக்குற்றிகளை கடத்த பயன்படுத்தப்பட்ட பட்டாரக வாகனத்தினையும் ,   வாகனத்தின் சாரதி உட்பட நால்வரையும்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது 13 முதிரை மர குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாளை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில்  கைப்பற்றப்பட்ட முதிரை மரக்குறுற்றிகளையும்  சந்தேக நபர்களையும்  முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டுவருவதாக   மாமடுவ பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Comments
Loading...