தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் தந்­தை­யின் வாக­னத்­தில் மோதுண்டு 5 வயது சிறுமி பலி

வவுனியா செட்­டிக்­கு­ளம் வீர­பு­ரம் பகு­தி­யில் தந்­தை­யின் வாக­னத்­தில் மோதுண்டு சுகந்­தன் துசாந்­தினி என்கின்ற   5 வயது சிறுமி  பலியாகியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

குறித்த சம்பவம்   நேற்­று­முன்­தி­னம்  இடம்பெற்றுள்ளது, சமபவம் தொடபில் மேலும் தெரியவருவது..

சிறுமியின்  தந்தை  வீட்­டி­லி­ருந்து ஆடைத்­தொ­ழிற்­சா­லைக்­குப் பணி­யா­ளர்­களை ஏற்­றிச் செல்­பவர் என்றும்,  காலை­யில்  செல்லும்போது  தனது மகளை முள்­பள்­ளிக்கு ஏற்­றிச்­சென்று இறக்­கி­வி­டு­வது வழக்­கம்.

அவ்­வாறு சம்பவதினத்தன்று சிறுமியை  இறக்­கி­விட்­டு­விட்டு வாக­னத்தை திருப்­பி­ய­போது,  சிறுமி  வாக­னத்­து­டன் மோதுண்­டுள்ளார்.

இந்நிலையில்  சிறுமி  செட்­டிக்­கு­ளம் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு மேலதிக சிகிற்சைக்காக  வவு­னியா மருத்­து­வ­ம­னையில்  அதி­தீ­விர சிகிச்சைப் பிரி­வில்  சேர்க்கப்பட்டுள்ளார்.

எனி­னும் சிகிற்சை  பய­ன­ளிக்காமல் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளது

.

Comments
Loading...