தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் தமிழர் நிலங்களை திட்டமிட்டு ஆக்கிரமிக்கும் பெரும்பான்மை இனம்

வவுனியா, சாந்தசோலை கிராமத்தின் பொது மயானத்திற்கென ஒதுக்கப்பட்ட ஒரு பகுதி காணி இனந்தெரியாத நபர் ஒருவரினால் அபகரிக்கப்பட்டு தூண்போட்டு வேலி அடைக்கப்பபட்டுள்ளதாக  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சாந்தசோலை கிராமத்திற்கான பொது மயானத்தின் காணி கொக்குவெளியிலுள்ள பெரும்பான்மை இனத்தவரினால் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும்,

அதனை அவர் தமிழ் இனத்தவர் ஒருவருக்கு முற்பணம் ஆங்கி விற்பனை செய்யதுள்ளதாகவும் தெரவிக்கப்படுகின்றது.

பொது மயானத்திற்கு இறுதிக்கிரியைகளுக்காகச் சென்ற பொதுமக்கள் பொது மயானக்காணியில் தூண்போட்டு  இரண்டரை ஏக்கர் பரப்பளவு அபகரிக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அது பொது மயானத்திற்குரிய காணி என்பதை கிராம அபிவிருத்திச்சங்கத்தினூடாக அறிந்து கொண்ட மக்கள் ,பின்னர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அங்கு சென்ற பொலிஸார் கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் கிராம சேவையாளர், பிரதேச செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு முறையிடுமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதையடுத்து கிராம சேவையாளருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொக்குவெளியிலுள்ள பெரும்பான்மை இனத்தைச்சார்ந்த ஒருவர் அக்காணியினை அபகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது,

இதையடுத்து சாந்தசோலை கிராம அபிவிருத்திச்சங்கம் இந்த விடயம் தொடர்பில் குறித்த  அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...