தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் திடீரெனப் பற்றிய காட்டுத்தீ….

வவுனியா குருந்துபிட்டி பகுதியில் குடியிருப்புக்கு பின்பாகவுள்ள காட்டுப்பகுதி  திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ இன்று மதியம் 1 மணியளவில் தீ பிடித்ததுடன் காற்றின் வேகம் அதிகரித்ததால் எல்லா இடங்களுக்கும் தீ பரவிய நிலையில்  அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்ததாகவும் கூறப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற  வவுனியா நகரசபை தீ அணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீவிபத்தில் 10 ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதி தீயில் கருகி உள்ளதாகவும் கூறப்படுகின்றது

இந்த சம்பவம் தொடர்பில்  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...