தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் புதையல் தோண்டியவர் கைது…

வவுனியா செக்கட்டிப்புலவு, குஞ்சுக்குளம் வயல் வெளியில் புதையல் தோண்டிய 38 வயதான குளியாப்பிட்டியைச் சேர்ந்த  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது புதையல் தோண்டுவதற்கு  பயன்படுத்திய கில்ட்டி உபகரணம், மின்பிறப்பாக்கி, நிலத்தைத் தோண்டப் பயன்படும் பொருள்கள். மண் அகழ்வதற்கான உபகரணங்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை புதையல் தோண்டிய ஏனைய ஏழு பேரும்  தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Comments
Loading...