Designed by Iniyas LTD
வவுனியாவில் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது ..
வவுனியாவில் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் இணைந்து நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உக்கிளாங்குளம் பகுதியில் வைத்து குறித்த பெண்ணும், ஆணும் மோட்டார்சைக்கிளில் ஹெரோயினை விநியோகம் செய்வதற்காக சென்றபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா, தோணிக்கல் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரும் மூன்றுமுறிப்பு பகுதியை சேர்ந்த லிங்கராசா கிருஷாந்தன் ஆகியோருமே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.