Designed by Iniyas LTD
வவுனியாவில் பொலிஸார் இருவர் கைது…
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இன்று (19) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுபாஸ்குமார ஆரியரத்னா பொலிஸ் உத்தியோகத்தர் விதான ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் தொலைபேசி ஆய்வு விசாரணைகளின்போது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புதையல் தோண்டியவர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து உடனடியாக முல்லைத்தீவு பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கு ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அதோடு பொலிஸ் உத்தியோகத்தருக்கு தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இருவரும் தமது கடமைகளைப் பொறுப்பேற்கச் செல்லவில்லை.
இதனையடுத்து இன்று (19) அதிகாலை இருவரும் கைது செய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.