Designed by Iniyas LTD
வவுனியா கற்குழியில் இளைஞர் கைது…
வவுனியா கற்குழிப்பகுதியில் இளைஞன் ஒருவரை ஹெரோயின் போதைப் பொருட்களுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வுப்பிரிவுடன் போதை ஒழிப்புப்பிரிவினர் இணைந்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அவரிடமிருந்து 510 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளினை பொலிஸார் மீட்டதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.