தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் மரணம்..

வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி  நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு மருதானையைச் சேர்ந்த  41 வயதுடைய கேசவன் சசிகுமார் என்ற நபரே இயிரிழந்துள்ளார்.

குறித்த கைதி ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு  வவுனியா சிறைச்சாலையில் சிறைவாசம் பெற்றுவந்தார்.

இந்நிலையில்   சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி    இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Comments
Loading...