தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியா தமிழ்மன்றத்தின் ‘தமிழ் மாருதம்’ நிகழ்வு!

வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்தும் தமிழ் மாருதம் 2016 முதலாம் நாள் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) மாலை 5.00 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இரு நாட்கள் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுகளின் முதல்நாள் நிகழ்வுகள் தமிழ் மா மன்றத்தின் தலைவர் வைத்தியர் கி.கிருபான ந்தகுமாரன் தலைமையில் இடம்பெற்றது. நேற்றைய தினம் இசை அரங்கு, இசையும் அசையும், வழக்காடு மன்றம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும் புத்தக மலிவுவிலைக் கண்காட்சி, ஒவியக் கண்காட்சி என்பன இடம்பெற்றிருந்தது.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று காலை மற்றும் மாலை நேர நிகழ்வுகள் என இரு அமர்வுகளாக இடம்பெறவுள்ளது.
வவுனியா மாவட்டத்திலே 2013ஆம் ஆண்டு முதல் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலைத்துறைகளில் பலதரப்பட்ட செயற்பா டுகளில் ஈடுபட்டுவரும் தமிழ் மாமன்றமானது, பிரதேசக் கலை இலக்கிய இரசனை மேம்பாட்டினை ஏற்படுத்தும் பொருட்டு 2014 முதல் ஒவ்வொரு வருடமும் முத்தமிழுக்கும் விழா எடுத்து வருகின்றது.
அதன்படி 2014ஆம் ஆண்டு இயல் விழா என்னும் பெயரிலும் 2015ஆம் ஆண்டு தமிழ் மாருதம் 2015 எனும் பெயரிலும் ஒரு நாள் விழாவாக இடம்பெற்றுக் கலை இலக்கிய ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்ற நிலையில், இவ்வாண்டு தமிழ் மாருதம் 2016 என்னும் பெயரில், இரு நாட்களாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...