Designed by Iniyas LTD
வவுனியா – நெடுங்கேணி பகுதியில் கிணற்றிலிருந்து 7வயது சிறுவனின் சடலம் மீட்பு..
வவுனியா – நெடுங்கேணி பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
சிறுவனின் பெற்றோர் வெளியில் சென்ற நிலையில், தனது சகோதரனுடன் கிணற்றிற்கு அண்மையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், தவறுதலாக உள்ளே விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் முதிரம்பிட்டி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் அலெக்சன் (வயது 7) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்தவாரமும் வவுனியா கற்குளம் பகுதியில் 6 வயது சிறுவன் ஒருவனின் சடலம் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.