Designed by Iniyas LTD
வவுனியா இராணுவ முகாமிலிருந்த 14 படையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா பம்பைமடு இராணுவ முகாமிலிருந்த 14 படையினர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இராணுவத்தினருக்கு திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணாமாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மேலும் பல படையினருக்கு பம்பைமடு இராணுவ முகாமில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள படையினரின் ஆடைகளிலும், முகத்திலும் ஒரு வித சாயம் பூசப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.