தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் குழப்பநிலை….

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று முதல் இணைந்த பேருந்து சேவையை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல் வட மாகாண சபையினால் வழங்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில்இணைந்த   பேருந்து சேவைக்காக தனியார் பேருந்து சாரதிகள் சென்றபோது இ.போ.ச சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகளுக்கிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இணைந்த சேவை மேற்கொள்வதிலும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது,

இந்த நிலையில் இணைந்த சேவை மேற்கொள்ளுமாறு தமக்கு தலைமை அலுவலகத்திலிருந்து அறிவித்தல் வழங்கப்படவில்லை என இ.போ.ச சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...