தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியா – வேப்பங்குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு.

வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம், இன்று வவுனியா, வேப்பங்குளம், ஆறாம் ஒழுங்கையில் கிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் மைதானத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்தே மீட்கப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள்ள்து.

கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர் சத்தியசீலன் டிலக்சன் (வயது 22) என உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...