தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவு-ஆச்சிபுரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்?

Untitledவவுனியா ஆச்சிபுரம் பகுதியிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

ஆச்சிபுரம் பகுதியில் வசித்து வந்த தர்மலிங்கம் மகேந்திரன் 55வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபருக்கு சொந்தமான இரண்டு காணிகளில் மனைவி பிள்ளைகள் ஒரு வீட்டிலும் குறித்த நபர் தனியாக உள்ள வீட்டிலும் வசித்து வந்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வவுனியா வைத்தியசாலையில் சல வாசலில் சவ்வுவளர்ந்துள்ளது என்று தெரிவித்து சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் மறுபடியும் அந்த இடத்தில் சவ்வு வளர்ந்து நோயின் தாக்கம் அதிகமாக சில மாதங்களாககாணப்பட்டுள்ளது. எனினும் வைத்திய சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.

நேற்று இரவு மனைவி சாப்பாட்டினை கொடுத்து விட்டு அருகிலுள்ள வீட்டில் தங்கியுள்ளார். பின்னர் இன்று காலை வீட்டிற்குச் சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த நபர் காணப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்குச் விரைந்த பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர் நோய்த்தாக்கம் காரணமாகவே தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...