தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வாகரையில் மின் ஒழுக்கினால் வீடொன்று நாசம்…

மட்டக்களப்பு வாகரை – அம்பந்தனாவெளி  கிராமத்திலுள்ள வீடொன்று மின்னொழுக்கினால் தீப்பற்றிய நிலையில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பிரதேச அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.புவிதரன் தெரிவித்தார்.

கணபதிப்பிள்ளை நாகரெத்தினம் என்பவரின் வீடே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் எவரும் வீட்டிலில்லாத சமயம் இந்த மின்னொழுக்கு ஏற்பட்டுள்ளது.

வீடு தீப்பற்றிக் கொண்டதை அடுத்து அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்த போதும் தீயை அணைக்க முடியாமற்போய் வீட்டிலுள்ள அத்தனை உடமைகளும் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில்  வாகரைப் பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். .

இதேவேளை பாதிக்கப்பட்ட குடும்பத்தவருக்கு வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஹரனின் ஆலோசனைக்கமைவாக உடனடியாகவே வேர்ள்ட் விஷன் தன்னார்வ நிறுவனத்தின் அனுசரணையுடன் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு நிவாரணம் இன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...