தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரான்சில் வானவேடிக்கை பார்க்க வந்த மக்கள் மீது பாரவூர்தியால் மோதி 80 பேர் படுகொலை!

frace-lorry-attace-4பிரான்சின் தேசிய நாள் வானவேடிக்கையைப் பார்வையிடுவதற்காக பிரான்ஸின் நீஸ் பிராந்தியத்தில் ஒன்கூடிப் பார்வையிட்ட பொதுமக்கள் மீது பாரவூர்த்தி மோதியதில் 80 பேர் வரையில் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரான்சின் தேசிய நாள் வானவேடிக்கையைப் பார்வையிடக் கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்குள் பாரவூர்தி இரண்டு கிலோ மீற்றர் வரை வேகமாகச் சென்றதால் சம்பவ இடத்திலேயே 80 பேர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாரவூர்தி மீது காவல்துறையினர் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பாரவூதிச் சாரதி சம்வ இடத்தில் கொல்லப்பட்டார். சாரதி மீதான துப்பாக்கிச் சூட்டின் போது சாரதியும் துப்பாக்கியால் சுட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாரதியின் துப்பாக்கிச் சூட்டில் பிரான்ஸ் எல்லைப் பாதுகாப்பு காவல்துறையின் அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
முதலில் இச்சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் எனத் தெரிவிக்கப்பட்ட போதும் பின்னர் குற்றவியல் சம்பவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் மத்திய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இத்தாலிய எல்லையும் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான தாக்குதல் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் ஏதும் புலப்படவில்லை என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

frace-lorry-attace-4

frace-lorry-attace-2

frace-lorry-attace-3

france-lorry-1

Comments
Loading...