Designed by Iniyas LTD
வாய்த்தர்க்கத்தால் இருவர் கொலை!
பன்னல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஆண்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 30 மற்றும் 32 வயதுடைய ஆண்கள் இருவரே கொலைசெய்யப்பட்டுள்ளதுடன், வாய்த்தர்க்கம் காரணமாக ஏற்பட்ட மோதலில் இந்த கொலைகள் இடபெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். சும்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மரண விசாரணைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.