Designed by Iniyas LTD
விக்ரம் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு
விக்ரம் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக, அவர் நடித்த படத்தின் டீஸர் ரிலீஸாக உள்ளது.
‘வாலு’ விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘ஸ்கெட்ச்’. தமன்னா, ஸ்ரீபிரியங்கா இருவரும் ஹீரோயினாக நடித்துள்ளனர். வடசென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளிக்கு டீஸரை மட்டுமே ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது படக்குழு. அக்டோபர் 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘ஸ்கெட்ச்’ படத்தின் டீஸர் ரிலீஸாகிறது.