Designed by Iniyas LTD
விசா இல்லாமல் இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல நடவடிக்கை..
இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் சுற்றுலாத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக இந்தியா உட்பட அண்டை நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் சுற்றுலாத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை பரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குழுவின் பரிசீலனையின் அடிப்படையில், விரைவில் இந்தியாவில் இருந்து விசா இன்றி சுற்றுலா பயணிகள் இலங்கை செல்லலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி, சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், ஏஜெண்டுகள், விமான நிறுவனங்கள் மற்றும் விடுதிகளில் குறைந்த கட்டணத்தை வசூலிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது