Designed by Iniyas LTD
விசேட அதிரடி படையினரால் கனகராயன்குளம், கிளிநொச்சி பகுதியை சேர்ந்த இருவர் கைது..
வவுனியா கனகராயன்குளம், பகுதியில் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் நேற்று முந்தினம் இரண்டு யானை தந்தங்கள் மீட்கப்பட்டுள்ளது
இந்த சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம், கிளிநொச்சி பகுதியை சேர்ந்த இருவரை விசேட அதிரடி படையின கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களையும் கைது செய்யப்பட்ட நபர்களையும் கனகராயன்குளம் பொலிஸாரிடம் விசேட அதிரைப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது