Designed by Iniyas LTD
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர்: குஜராத் அணி சாம்பியன்
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் அதிகப்பட்டசமாக கேப்டன் பார்த்தீவ் பட்டேல் 105 ரன்களை குவித்தார்.
பின்னர் 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கடன் களமிறங்கிய டெல்லி அணி 134 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் காரணமாக குஜராத் அணி 139 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.