Designed by Iniyas LTD
விடுதலைப்புலிகளை அழித்த பின்னரும் தமிழீழம் உருவாகி வருகிறதாம்? இனப்படுகொலையாளி மகிந்த குமுறல்
விடுதலைப் புலிகளை அழித்துக் காப்பாற்றிய நாட்டில் தமிழ்ஈழம் இலகுவாக உருவாகி வருகின்றது. இதற்கு இடம்கொடுக்கும் அரசை வீழ்த்தும் எனது போராட்டக் குரல் பொது மக்கள் முன்னணியின் மாநாட்டில் இன்று ஒலிக்கும். சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியைப் பலப்படுத்துவதே எனது இலக்கு.
இவ்வாறு இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொது மக்கள் முன்னணியின் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று மாலை இடம்பெறவுள்ளது. மாநாடு தொடர்பில் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாவது:
சிறிலங்கா பொது மக்கள் முன்னணியின் வெற்றிக்காகவே நான் செயற்பட்டு வருகின்றேன். தாமரை மொட்டே எமது சின்னம். சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கே இன்று எனது ஒளிப்படமும் பெயரும் தேவைப்பட்டுள்ளது. என மேலும் தெரிவித்துள்ளார்.