தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விடுதலைப் புலிகளின் தங்கத்தை எடுக்க தோண்டிய போலீசுக்கு கிடைத்த பொக்கிஷம்!

விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தேடிய பொலிஸாருக்கு பெரும் இடைஞ்சலாக நீர் மாறியுள்ளது.

முள்ளிவாய்க்காலிலுள்ள காணி ஒன்றில் புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தேடும் பணியில் பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக பெக்கோ இயந்திரம் ஒன்று பயன்படுத்தப்பட்டு பாரிய குழி ஒன்று தோண்டியமையினால் அங்கிருந்து நீர் வர ஆரம்பித்துள்ளது. இதனால் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட உத்தரவிற்கமைய நேற்று பிற்பகல் இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பாரியளவு தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்ட விடுதலை புலி உறுப்பினர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அகழ்வு நடவடிக்கை மேற்கொண்டிருந்த போது வந்த நீர் காரணமாக அந்த இடம் கிணறு போன்றாகியுள்ளது. இதனால் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிப்பதாக முல்லைத்தீவு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...