Designed by Iniyas LTD
விடுதலைப் புலிகளின் 1500 கோடி சொத்து அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 1500 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில் காணப்பட்ட காணி, வெள்ளவத்தையிலுள்ள சுகபோக வீட்டுத் தொகுதி, கொழும்பு ஜம்பட்டா வீதியிலுள்ள நவீன அச்சகம், கருவாத்தோட்டத்திலுள்ள காணி, மற்றும் பல படகுகள் உட்பட வங்கிக் கணக்குகளும் இதில் அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் இந்த சொத்துக்கள் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
