Designed by Iniyas LTD
விடுதலைப் புலிகள் தொடர்பாக விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரையின் சிங்கள,ஆங்கில மொழிபெயர்ப்புகளை வழங்குமாறு உத்தரவு..
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரையின் சிங்கள,ஆங்கில மொழிபெயர்ப்புகளை வழங்குமாறு அரசாங்க மொழிபெயர்ப்புத் திணைக்களத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவினை கோட்டே நீதவான் நீதிமன்ற நீதிவான் ரங்க திசநாயக்க பிறப்பித்துள்ளார்.
கடந்த-20 ஆம் திகதி யாழில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரையின் போது “விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக சிங்கள அமைப்புகள் அளித்த முறைப்பாட்டுக்கமைய பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை நினைவில்கொள்ளத்தக்கது.
இந்த விசாரணைகளுக்காக,விஜயகலா மகேஸ்வரனின் உரையின் சிங்கள, ஆங்கில மொழியாக்க வடிவங்களை சமர்ப்பிக்குமாறு கோட்டே நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் குறித்த விடயம் தொடர்பான முன்னேற்றங்களை எதிர்வரும்- 20 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
