தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விடுதலைப் புலிகள் மீது விதித்திருக்கும் பயங்கரவாதத் தடை வழக்கில் ஐரோப்பிய ஒன்றியம் சாவலை எதிர்கொண்டது

iroppita (1) iroppita (4)

லக்ஸ்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய நீதிமன்ற விசாரணையின் போது, 2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய ஐரோப்பிய ஒன்றியத்தால் பயன்படுத்தப்பட்டிருந்த மூல ஆதாரங்களில் மோசமான குறைப்பாடுகள் அம்பலப்மாகியுள்ளன் அதையடுத்து, விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடையானது ஒரு நிச்சியம் அற்ற தன்மையை எட்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடைவிதிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒரு பொருத்தமான முன்னோடியாகக் கொண்டு செயற்பட்டமை தொடர்பில் நீதிபதிகள் தமது கவலையை வெளிப்படுத்தியதோடு, இந்தியாவில் பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு நேர்மையான விசாரணைகள் நடைபெற்றுள்ளனவா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்ந்தமைக்கான ஆதாரம் ஒன்றும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விடுதலைப் புலிகள் மீது பயங்கரவாதத் தடையை அமுல்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் விக்கிப்பீடியாவின் தகவல்களை நம்பகமான ஆதாரங்களாகப் பயன்படுத்தியமை தொடர்பில் நீதிமன்றம் அதிர்ச்சியடைந்துள்ளது. அடுத்த ஆறுமாதங்களுக்குள் சாதகமான தீர்ப்புக் கிடைக்கும் என்ற மனநிலையோடு விடுதலைப் புலிகளுக்காக வாதிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்தை விட்டுப் புறப்பட்டனர்.

ஐரோப்பிய பேரவை (European Council), ஐரோப்பிய ஆணைக்குழு(European Commission) , நெதர்லாந்து மற்றும் பிருத்தானியா ஆகியவற்வைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் விடுதலைப் புலிகள் தொடர்ந்து நீடிக்கவேண்டுமென எதிர்த்து வாதிட்டனர்.

சிறீலங்கா அரச ஆணைக்குழு ஒன்று நீதிமன்ற நடவடிக்கைகளை நோட்டமிட்டிருந்தனர். அத்துடன், நீதிமன்றந்துள் நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கூடியிருந்தனர்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஆம்ஸ்ரர்டாமைத் தளமாகக் கொண்ட சட்டத்தரணி விக்டர் கோப் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு, ‘சிலரால் இனப்படுகொலை என்றுகூடக் கூறப்பட்டுள்ள ஒரு கொடுமையான ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராக நியாயமான போராட்டத்தையே மேற்கொண்டனர் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை,’ என்று வாதிட்டார்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சிரியாவின் ஜனாதிபதி பஸார் அல் அசாத்துடன் ஒப்பிட்ட அவர், பயங்கரவாதம் மீதான பிரித்தானியாவின் மாறுபட்ட நிலைப்பாடு குறித்தும் நீதிமன்றத்துக்கு நினைவூட்டினார்: ‘இதே அரசாங்கம் நியாயமான போராட்டத்தை மேற்கொண்ட மண்டேலாவை பயங்கரவாதி என கூறியிருந்ததுடன் பின்னர் அவரது போராட்டம் நியாயமானது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது’ என கோப் எடுத்துவிளக்கினார். அப்போது பதிலளித்த பிரித்தானிய பிரதிநிதி, கோப் பிரித்தானியாவின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் கருத்து வெளியிட்டதாகவும் ஆனால் இந்த விசாரணையின் நோக்கம் அதற்கு புறம்பானது எனக் கூறியுள்ளார்.

‘விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதை மறுதலிப்பதானது, அரசியல் வழியில் தமிழர்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கின்ற ஒரு வினைத்திறன் வாய்ந்த தரப்பாக புலம்பெயர் தமிழர்கள் தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதைத் தடுப்பதாகக் கூறி’ கோப் தனது வாதத்தை நிறைவு செய்தார்.

கோப்பினுடைய வாதம் நான்கு முக்கிய சாராம்சங்களைக் கொண்டிருந்தன. ஒன்று, விடுதலைப் புலிகள் ஆயுதமேந்திப் போராடிய போராளிகள், இவ்வாறானவர்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களால் ஆளுகை செய்யப்படவேண்டுமே தவிர பயங்கரவாத எதிர்ப்புப் பொறிமுறைக்குள் அல்ல. இரண்டு, விடுதலைப்புலிகளின் தடையை நியாயப்படுத்த ஐரோப்பிய ஒன்றிய பேரவை விக்கிப்பீடியா ஆதாரங்களை பயன்படுத்தியதில் நம்பகத்தன்மை தொடர்பான பிரச்சினை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று, இந்தியா மற்றும் பிரித்தானியாவின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப் புலிகளைத் தடைசெய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. நான்கு, 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கடந்த 5 வருடங்களாக எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை என்னும் உண்மை நிலையை கோப் வாதிட்டார்.

டச்சு அரசாங்க ஆணைக்குழு, ஐந்து தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிய குற்றத்துக்காக நெதர்லாந்தின் ஹேக்கில் 2011 இல் தண்டனை வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, ஒரு ஆயுத மோதலுக்கான கட்சிகள் பிற சட்டங்களால் இன்னும் ஆழுகை செய்யப்பட்டதை கூறியது, மேலும் யேர்மனி மற்றும் பிரான்சு போன்ற நாடுகளில் இதேபோன்ற தீர்ப்பு மூத்த நீதிபதிகளால் வழங்கபட்டிருந்ததையும் அது சுட்டிக்காட்டியது.
பயங்கரவாதத் தடை தொடர்ந்து அமுலில் இருக்குமானால், விடுதலைப் புலிகளிடமிருந்து எதிர்காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்காது என ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்தது. அத்துடன், தடையை நீக்கிவிட்டால் விடுதலைப் புலிகள் சண்டையை மீள ஆரம்பிக்கும் சாத்தியக்கூறு இருக்கும் எனத் தெரிவித்தது.

விடுதலைப் புலிகளை 2000 ஆம் ஆண்டு தடைவிதித்தமையானது ஒரு நடுநிலையான நீதிபதியைக் காட்டிலும் தமது உள்துறைச் செயலருக்கு அது நியாயமாகப் பட்டது எனப் பிருத்தானியா தெரிவித்தது. மேலும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்தும்போது பாராளுமன்றால் ஆதாரங்கள் வழங்கப்படுவது மறுக்கப்படலாம். நீதிமன்ற விசாரணை முடிந்ததும் பிருத்தானியாவின் பலம்வாய்ந்த நான்கு ஆணைக்குழுவினரையும் தமிழ்நெற் ஊடகவியலாளர்கள் அணுகியபோது கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.

நீதிபதிகள், குறித்த தரப்புகளிடம் கேழ்விகள் கேட்டதில் இரண்டு மணித்தியாலங்களைச் செலவிட்டன. விடுதலைப் புலிகளை 2006 இல் தடைசெய்யும் முடிவை எடுக்கமுன்னர், இந்தியாவில்  அடிப்படை உரிமைகள் நிலைமை குறித்து ஐரோப்பிய பேரவை ஆராய்ந்திருந்தமைக்கான எந்த ஆதாரமும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு சவாலான ஒரு நடைமுறை அங்கிருப்பதை நீதிமன்றம் சந்தேகித்தது, அந்தவகையில் எந்தத் தீர்ப்பும் அங்கு ஐரோப்பிய நியமங்களுக்கு ஒத்தவை அல்ல.

ஐரோப்பிய பேரவை, இந்தியாவில் உள்ள தடையை அடிப்படையாகக் கொண்டு என்பதை மறுத்து, பிருத்தானியாவில் உள்ள தடையை அடிப்படையாகக் கொண்டே விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை அமுலாக்கப்பட்டதாக கூறியது.

Comments
Loading...