தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விமல் வீரவன்சவை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!

downloadகூட்டு எதிர்கட்சியின் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று நுவரெலியா நகர மத்தியில் அமைந்துள்ள பிரதான தபாற் கந்தோருக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரட்ணாயக்க, மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர, மத்திய மாகாண சபை உறுப்பினர் நிமால் பியதிஸ்ஸ, முன்னாள் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் எச்.எம்.அபேசிங்ஹ உட்பட கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை விடுதலை செய்யக் கோரியும்,

கூட்டு எதிர்கட்சியின் அங்கத்தவர்களை அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டாம் என கோரியும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் வரி சுமையை குறைக்க வேண்டும், அரசியல் சாசனத்தை தோல்வி அடையச் செய்வோம், அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவோம் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Comments
Loading...