தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விமானத்தில் பறந்தவாறு கூரையில் இருந்து செல்பி எடுக்கலாம் வாங்க!

ரயில் மீது பயணம் செய்த காலம் சென்று தற்போது விமானத்தின் மீதும் அமர்ந்து சொகுசாக இயற்கை காட்சிகளை அனுபவித்தவாறு பயணம் செய்யும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை வின்ட்ஸ்பீடு (Windspeed) என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஸ்கைடெக் (SkyDeck) என்ற அழைக்கப்படும் அந்த தொழில்நுட்பம்,  விமானத்தின் கூரை மேல் மையத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த கூண்டை சுற்றி பாதுகாப்பான மற்றும் உறுதியான கண்ணாடி சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கூண்டிற்கு செல்வதற்கு விமானத்திற்குள்ளே இருந்து தானியங்கி படிக்கட்டுகள் மற்றும் ஆள் தூக்கி (Lift) வசதியும் உள்ளது.
விமானத்திற்குள் உள்ள ஒரு சிறப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு இருக்கைகளில் அமர்ந்துகொண்டால், அந்த இருக்கைகள் மேலே தூக்கி செல்லப்பட்டு கூரை மீதுள்ள கண்ணாடி கூண்டிற்குள் நிலை நிறுத்தப்படும். பின்னர், எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும், சோர்வு ஏற்படாமல் சுமார் 360 டிகிரி சுற்றளவு வரை சுற்றி பார்த்துக்கொண்டு பயணம் செய்யலாம்.
அதாவது, பூமியிலிருந்து சுமார் 3,00,000 அடி உயரத்தில் பறந்துக்கொண்டு இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டு பயணிக்கலாம்.

Comments
Loading...