Designed by Iniyas LTD
விமானத்தில் பிரச்சனையா! இனி பயப்படவேண்டியதில்லை
விமானத்தில் அவசரகால நிலைமைகளின் போது பயணிகள் அமர்ந்திருக்கும் பகுதி தன்னியக்க ரீதியில் விடுபட்டு பரசூட் மூலம் பாதுகாப்பாக தரையிறக்க வழிவகை செய்யும் புதிய தொழில்நுட்பமொன்றை உக்ரேனிய விமானப் பொறியியலாளரான விளாடிமிர் தரென்கோ அறிமுகப்படுத்தியுள்ளார்.
விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்படுதல் உள்ளடங்கலான அவசரகால நிலைமையின் போது விமானத்தில் பயணிகள் அமர்ந்திருக்கும் பகுதி தன்னியக்க ரீதியில் விடுபடுகிறது.
இதன்போது அந்த விடுபட்ட விமா னப் பகுதியின் கீழுள்ள இறப்பர் குழாய் கள் மூலம் அந்த விமானத்தின் கூரைப் பகுதியிலுள்ள பரசூட்டுகள் காற்றடிக்கப்பட்டு விரிந்து அந்தப் பகுதி பாதுகாப்பாக தரையிறக்கப்படுகிறது.