தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விராட் கோலி- ஹசீம் ஆம்லா இடையே கடும் போட்டி

இன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைகளை முறியடிப்பதில் தற்போது இரு சிறந்த வீரர்களான விராட் கோலி- ஹசீம் ஆம்லா இடையே கடும் போட்டி நடக்கிறது. தென்ஆப்பிரிக்காவின் ஹசீம் ஆம்லா, இந்திய வீரர் விராட் கோலியின் சாதனையை சமீபத்தில் முறியடித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 102 ரன்கள் குவித்த ஆம்லா, தனது 17-வது சதத்தைப் பெற்றார். இதன் மூலம் குறைந்த ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 17-வது சதத்தைப் பெற்ற வீரர் என்ற சாதனையை ஆம்லா படைத்தார். இவர் இதுவரை 101 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.Amla-koli-face-to-face

இதற்கு முன்பு கோலி தனது 17-வது சதத்தை 112-வது போட்டியில் பெற்றிருந்தார். தற்போது ஆம்லா அவரை முந்தியுள்ளார். 156 போட்டிகளில் 17-வது சதத்தைப் பெற்ற ஏ பி டிவில்லியர்ஸ், கங்குலி (170 போட்டிகளில்), சயீத் அன்வர் (177 போட்டிகளில்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.

குறைந்த இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்கள் என்ற சாதனையையும் ஆம்லா நெருங்கி வருகிறார். விவியன் ரிச்சர்ட்ஸ், விராட் கோலி ஆகியோர் 114 இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்களை எடுத்து ஒருநாள் போட்டி சாதனையை தங்கள் வசம் வைத்துள்ளனர்.

ஆனால், விவியன் ரிச்சர்ட்ஸ் 126 போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களைக் குவித்தார் என்றால், விராட் கோலியோ 120  போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை எட்டினார். தற்போது ஆம்லா 101 போட்டிகளில் 4,910 ரன்களில் இருக்கிறார். கோலி, ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடிக்க இன்னும் 90 ரன்களே உள்ள நிலையில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்கள் எடுத்த சாதனையாளராக விரைவில் ஆம்லா ஆகிவிடுவார்.

ஆனால் ஆம்லாவுக்கு சவால் விடும் வகையில் கோலியும் வேறு புதிய சாதனைகளைப் படைப்பார் என்று நம்பலாம்!

Comments
Loading...